லெபனானில் ஒரே நேரத்தில் வெடித்த இயந்திரங்கள் – பலர் உயிரிழப்பு

லெபனானில் ஒரே நேரத்தில் வெடித்த இயந்திரங்கள் - பலர் உயிரிழப்பு

லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்படப் பல பகுதிகளில் பல வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த வெடிப்புச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 2,800 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்கள் செய்தி பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தும் “பேஜர் மெசேஜ் எக்ஸ்சேஞ்ச்” இயந்திரங்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீதிகள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் இந்த வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வெடிப்புக்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டு நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா போராளிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரேடியோ சிக்னல் ஜாமர் முறையைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வெடிப்புகளில் லெபனானுக்கான ஈரான் தூதர் உட்பட 09 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply