மன்னாரில் வாக்களிப்பு நிலையங்கள் தயார்ப்படுத்தும் பணிகள் தீவிரம்

மன்னாரில் வாக்களிப்பு நிலையங்கள் தயார்ப்படுத்தும் பணிகள் தீவிரம்

மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்ப்படுத்தும் பணிகள் இன்று (19.09) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பாடசாலைகள் நிறைவடைந்ததன் பின்னர், மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களாகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் கிராம சேவையாளர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு 90,607 வாக்காளர்கள் வாக்களிக்கத்  தகுதி பெற்றுள்ளதுடன், 98 வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்புக்காகத் தயார்ப் படுத்தப்பட்டு வருகின்றன. 07 வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மன்னார் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாக்களிப்பு நிலையங்களின் நிலை குறித்து ஆராய்வதற்கு, மன்னார் பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப் தலைமையிலான குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version