
தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,551 ஆக உயர்வடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 337 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இவற்றில், சட்ட மீறல்கள் தொடர்பில் 336 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
,இதுவரை 4,929 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.