மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு  

மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு  

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று(20.09) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.    

1979 ஆம் ஆண்டின் 61ம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானியில், மின்சாரம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகத்தை அத்தியாவசிய பொதுச் சேவைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply