2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என நம்பப்படும் தேசிய மக்கள் சக்தியின்
ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தனது வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார்.
“இன, மத பேதமின்றி சாதித்த அபார வெற்றிக்கு வாழ்த்துகள். இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆலோசனையின் பெயரில்
சஜித்பிரேமதாசவுக்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் வித்தியாசத்தை காட்டிய வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எமது நன்றிகள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.