
2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை மகளிர் குழாம் இன்று(23.09) ஐக்கிய அரபு அமீரக நோக்கி பயணமானது.
2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி முதல் 20ம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டினால் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை குழாத்தினர் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டதன் பின்னர், இன்று(23.09) நாட்டிலிருந்து புறப்பட்டனர்.
இலங்கை குழாம்: சாமரி அத்தபத்து(அணித் தலைவி), விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹஷினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, நிலாக்ஷி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, உதேஷிகா பிரபோதினி, அச்சினி குலசூரியா, சுகந்திகா குமாரி, சச்சினி நிசன்சலா, இனோஷி பெர்னாண்டோ, சஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா, இனோகா ரனவீர
ரிசர்வ் வீரர்: கௌஷினி



