வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி விலகலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. புதிய ஜனாதிபதி பதவியேற்றதனை தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளதாக நம்பப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆளுநராக நியமிக்கப்பட்ட இவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் குறித்த பதவியினை வகித்தார்.