அனுரகுமார ஜனாதிபதியானது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை பாதிக்காது – மூடிஸ் நம்பிக்கை

அனுரகுமார ஜனாதிபதியானது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை பாதிக்காது - மூடிஸ் நம்பிக்கை

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமை நாட்டின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை சீர்குலைக்காது என உலகளாவிய கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் தற்போதைய கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டம் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்கள், அவ்வாறே இருக்கும் என்று மூடிஸ் நம்புகிறது.

இருப்பினும், நிதி ஒருங்கிணைப்பை பராமரிப்பது சவாலானது என்றும், எதிர்காலத்தில் கடன் அபாயங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் மூடிஸ் எச்சரித்துள்ளது.

Social Share

Leave a Reply