உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் எனச் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போது சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வருடாந்தம் 5,000க்கும் அதிகமான மார்பக புற்றுநோயாளர்கள் பதிவாகுவதாக சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.