குஷ் போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை கைது

குஷ் போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 கிலோ கிராமிற்கும் அதிகமான குஷ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 21 வயதுடைய பிரித்தானிய பிரஜை என இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் பயணப் பொதியில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply