உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தற்போதைய நிலவரம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தற்போதைய நிலவரம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு 10 டெஸ்ட் தொடர்கள்(26 போட்டிகள்) மீதமுள்ள நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை உட்பட சில அணிகளுக்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையின் தற்போதைய நிலவரப்படி இந்தியா, அவுஸ்ரேலியா அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களில் காணப்படுகின்ற போதும், மூன்றாம் இடத்திலுள்ள இலங்கை அணிக்கும் முதல் இரண்டு இடங்களைக் கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

அண்மையில் நிறைவடைந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டியதனுடாக இலங்கை 24 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. இலங்கைக்கு மீதமிருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு எதிரான தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதனூடாக இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்ய முடியும். 3 போட்டிகளில் வெற்றியீட்டி ஒரு போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில், ஏனைய அணிகளுக்கு இடையிலான தொடரின் முடிவுகளின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும்.

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கும் முதல் இரண்டு இடங்களை உறுதி செய்வதற்கு அதிகப்படியான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இரு அணிகளுக்கும் இடையில் எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் அவுஸ்ரேலியாவில் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடர் தீர்மானமிக்க தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மீதமிருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் நுழைவதற்குச் சிறிதளவு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version