நிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கிடையில் நேற்று(02.10) நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகச் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.