மன்னாரில் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சிக்கிய பெண்

மன்னாரில் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சிக்கிய பெண்

மன்னார், பேசாலையிலுள்ள கடை ஒன்றிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 30 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இன்று(03.10) கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலிற்கமைய விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சிகரெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண்ணும், கைப்பற்றப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply