மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பணிபுரியும் பிரதி ஆணையாளர் உட்பட இருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் குறித்த திணைக்களத்தில் பணிபுரியும் அலுவலக ஊழியர் மற்றும் தரகர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
மூவரும் 300,000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ளும் போதே இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று பேருந்துகளின் உரிமைப் பத்திரங்களை மாற்றுவதற்கே இவ்வாறு இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.