இடைநிறுத்தப்பட்டுள்ள 2024/2025 பெரும்போகத்திற்கான உரம் வழங்குதல் மற்றும் மீனவர்களுக்கான நிவாரண திட்டங்களுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
செப்டம்பர் மாத நிலுவைத் தொகையுடன் ஒக்டோபர் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பில் ஆட்சேபனை இல்லை என ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.