மகளிர் டி20 உலகக் கிண்ணம்: இங்கிலாந்துக்கு வெற்றி

மகளிர் டி20 உலகக் கிண்ணம்: இங்கிலாந்துக்கு வெற்றி

2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று(05.10) நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி இங்கிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டேனி வயாட் 41(40) ஓட்டங்களையும், மாயா பௌஷிர் 23(18) ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, அதன் பின்னர் களத்திற்கு வந்த வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பங்களாதேஷ் சார்பில் பந்து வீச்சில் நஹிதா ஆக்டர், பஹிமா காதுன், ரிது மோனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

119 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. பங்களாதேஷ் சார்பில் சோபஹனா 44(48) ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் லின்சி ஸ்மித், சார்லி டீன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதன்படி, இங்கிலாந்து மகளிர் அணி 21 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், இங்கிலாந்தின் டேனி வயாட் ஆட்ட நாயகியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply