உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 50 ரூபாவாக காணப்பட்ட உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக வரி 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, பெரிய வெங்காயம் மீதான இறக்குமதி விசேட வர்த்தக வரி 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விவசாயிகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply