தமிழரசுக் கட்சியின் நியமனக்குழுக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களின் வேட்பாளர்கள்
நியமனம் தொடர்பாக ஆராய்ந்து இறுதி முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
வவுனியாவில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட
நியமனக்குழு இன்று (06.10) கூடிய போதே இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனும் ,சுமந்திரனும் போட்டியிடவுள்ளதுடன்
ஏனைய 07 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.சி.சி.இளங்கோவன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன்,
தியாகராஜா பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.