ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்ப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்ப்பு

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத் தொடருக்கு அமைவாக வெளி விவகார அமைச்சர் சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டு, இலங்கை அரசின் நிலைப்பாட்டைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சமகாலக் கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைபை இலங்கை நிராகரிப்பதாகவும், மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், சாட்சிகளைத் திரட்டுகின்ற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாது என அமைச்சரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை நிராகரித்திருப்பினும், உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இலங்கை அரசு உறுதியளித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் பேரவை மற்றும் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளின் ஒத்துழைப்புடனும், மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடல் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply