வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சொந்தமான காணியை குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 42 ஏக்கர் அளவிலான காணியை அபிவிருத்தி திட்டத்திற்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி குத்தகைக்கு வழங்குவதன் மூலம் சுமார் 2 ஆயிரத்து 630 கோடி ரூபா இலாபம் பெற்றுக்கொள்ள முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னராக இடப்பற்றாக்குறை காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணை மில்லனிய பிரதேசத்திற்கும், பத்தரமுல்லையிலுள்ள சிறைச்சாலை தலைமையகத்தை மாலபே பிரதேசத்திற்கும் மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய குறித்த நடவடிக்கைக்கான நிதியினை சிறைச்சாலைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
