பாடசாலை, பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களில் சீசன் டிக்கெட்டில் பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
சீசன் டிக்கெட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீசன் டிக்கெட்டில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் மாதங்களில் இந்த விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.