கொழும்பு, பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் போலி கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்த
சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடும் நபர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
இவர்கள் போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காகப் பொலிஸ் அதிகாரி ஒருவரின் பெயரில் தயாரிக்கப்பட்ட முத்திரையையும் பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.