வாழைத் தோட்டம் – பழைய யோன் வீதியில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பாதாள உலக குழு உறுப்பினரான ‘கெசேல் வத்த ஃபவாஸ்’ கொலை செய்யப்பட்டுள்ளார்.
அங்கு காரில் வந்த இனம் தெரியாத சில நபர்களால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
