வவுனியா மாவட்ட விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட, பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி தொடரில் வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்துக்கு உட்பட்ட கலைமகள் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியனாகியுள்ளது.
இன்று வவுனியா பல்கலைக்கழ மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலைமகள் அணியும், வவுனியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 786 அணியும் இந்த போட்டியில் மோதியிருந்தன.
இந்தப் போட்டியில் கலைமகள் அணி 3-0 என வெற்றி பெற்று வவுனியா மாவட்ட சம்பியனானது. கலைமகள் அணி சார்பாக சங்கீர்த்தனன், அபிஷன், அஸ்மத் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றனர்.
இந்த வெற்றியின் காரணமாக செட்டிகுளம் பிரதேச செயலக கலைமகள் அணி மாகாண மட்ட போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளது. தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக கலைமகள் அணி இந்த வெற்றியினை பதிவு செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
