லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று (6/12/2021) முதற் போட்டியாக தம்புள்ள ஜியன்ட்ஸ் மற்றும் கண்டி வொரியர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள ஜியன்ட்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய தம்புள்ள ஜியன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றது. லங்கா பிரீமியர் லீக் 2021 இல் கூடுதலான ஓட்டங்களை தம்புள்ள ஜியன்ட்ஸ் அணி பெற்றது. இதில் பில் சோல்ட் 64(27) ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 37(23)ஓட்டங்களையும், தசுன் ஷானக்க 24(18) ஓட்டங்களையும், ரமேஷ் மெண்டிஸ் 22(11) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லஹிரு குமார 3 விக்கெட்களையும், அல்- அமின் ஹொசைன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
191 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய கண்டி வொரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றது. இதில் ரொவ்மன் பவல் 42 ஓட்டங்களையும், அஞ்செலோ பெரேரா 24(22) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரமேஷ் மென்டிஸ், நுவான் பிரதீப் ஆகியோர் தலா விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக பில் சோல்ட் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது போட்டியாக கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கோல் கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் கிளாடியேட்டர்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்தது 116 ஓட்டங்களை பெற்றது. இதில் பென் டங்க் 38 ஓட்டங்களையும், இசுரு உதான 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தனஞ்செய டி சில்வா, டுஸ்மாந்த சமீர, அகில தனஞ்செய ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 17.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களை பெற்றது. இதில் டினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும், தனஞ்செய டி சில்வா 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நுவான் துசார, புலின தரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.