ஜனாதிபதியின்‌ உருவம் பதித்த போலி நாணயத்தாளை தயாரித்த நபர் கைது

ஜனாதிபதியின்‌ உருவம் பதித்த போலி நாணயத்தாளை தயாரித்த நபர் கைது

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று (04.11) மாலை குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

அதுருகிரிய கொரத்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version