பாகிஸ்தான் கொலை/முக்கிய நபர் கைது – UPDATE

பாகிஸ்தானில் கொடூர முறையில் தீயிட்டு கொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ரவல்பிண்டி என்ற பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்தி

பாகிஸ்தான் – சியல்கோட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (03/12) கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் இன்று (07/12) கனேமுல்லையிலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நேற்று (06/12) மாலை ஸ்ரீலங்கன் விமான சேவையினூடாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடல், நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடற்கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இன்று மாலை அவரது உடல் குடும்பத்தாரிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உடற்கூராய்வு பரிசோதனைகள் நிறைவடைந்தமையின் காரணமாக இன்று அதிகாலை 2.30 மணியளவில் நீர்கொழும்பு வைத்தியசாலையிலிருந்து கனேமுல்லை, கந்தலியத்த பாலுவையிலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன்பின்னர் நாளைய தினம் (08/12) கனேமுல்லை பொல்ஹேன பொது மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் கொலை/முக்கிய நபர் கைது - UPDATE
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version