வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

வைத்தியர் ஷியாப்தீன் மொஹமட் சாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் இன்று (06.11) உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று குருநாகல் பிரதான நீதவான் திரு பந்துல குணரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வைத்தியர் சபிக்கு எதிரான குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதாக நீதவான் சுட்டிக்காட்டி, வழக்கை தொடர்வதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என தெரிவித்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கலாநிதி சபிக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையையும் நீதவான் நீக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைத்தியர் ஷியாப்தீன் மொஹமட் சாபி தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையில் தனது கடமைகளை முன்னெடுத்து வருகிறார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version