திருமலையில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்து

திருகோணமலை – கண்டி பிரதான வீதி மங்குபிரிஞ் பகுதியில் இன்று (07/12) காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆடை தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களில் 12 பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குச்சவெளி பிரதேசத்தில் இருந்து கப்பல் துறை தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் போது இரண்டு பஸ்களை முந்திச்செல்ல முற்பட்டபோதே, வேகக்கட்டுப்பாட்டை இழந்து குறித்த பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக உப்புவெளி பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(திருகோணமலை நிருபர்)

திருமலையில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்து
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version