தேர்தலுக்கு தயாரான மன்னார்

தேர்தலுக்கு தயாரான மன்னார்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடிடியரசின் 17 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மன்னாரில்,90,607 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தின், 98 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று (13.11) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் கடமைகளுக்காக, 290 பொலிஸாரும், 77 விசேட அதிரடிப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் 8 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, தேர்தல் கடமைகளுக்காக 1603 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்,

மன்னாரில் சிறந்த முறையில் தேர்தலை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில்,
நாளையதினம் மக்கள் வாக்களித்து முடிந்ததும் வாக்குப் பெட்டிகள் மாவட்டச் செயலகத்தின் வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்கெண்ணும் பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதாக மன்னார் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் க. கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply