மன்னார் வைத்தியசாலைக்கு முன்பாக விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் குவிப்பு

மன்னார் வைத்தியசாலைக்கு முன்பாக விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் குவிப்பு

மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்துக்காக நேற்று காலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்பிணித்தாயும் சேயும் வைத்தியசாலையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்கு முன்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மழையையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்திய அத்தியட்சகர் அசாத் ஹனீபா பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் குறித்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை கடமையிலிருந்த அனைத்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்திகின்றனர்.

மேலும் டயர்களையும் எரித்தும், கற்களை எரிந்தும் மக்கள் எதிர்ப்பினை வெளியிடுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் வைத்தியசாலைக்கு முன்பாக விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் குவிப்பு

இதேவேளை, தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

ரோகினி நிஷாந்தன்

மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply