ஏ-9 பிரதான வீதியூடான போக்குவரத்து வழமைக்கு

ஏ-9 பிரதான வீதியூடான போக்குவரத்து வழமைக்கு

பலத்த மழை காரணமாக யாழ்ப்பாணம் செல்லும் ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து போக்குவரத்து தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

ஏ9 வீதியில் பயணிப்பவர்கள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

குறிப்பாக வவுனியா நொச்சிமோட்டை, மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ளம் காரணமாக மக்கள் சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர்.

தற்போது வெள்ள நீர் வழிந்தோடியுள்ள நிலையில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version