தொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை

தொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள்
பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உணவு மற்றும் பானங்களை கொள்வனவு செய்தல் மற்றும் உட்கொள்ளலின் போது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை,வடகிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக ஆலோசகர் லஹிரு கொடித்துவக்கு, டெங்கு பரவலைத் தடுப்பதற்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறு பிரதேசவாசிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 45,448 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் மாத்திரம் 19,487 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் 22 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version