லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் டிசம்பர் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம்
மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், எரிவாயு விலைகளை அதிகரிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 05 கிலோ கிராம் சமையல் எரிவாயு 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு 694 ரூபாவிற்கும் தற்போதைய விலைக்கே விற்பனை செய்யப்படும்.