லொஹான் ரத்வத்தவுக்கு நீதவான் பிறப்பித்த உத்தரவு

லொஹான் ரத்வத்தவுக்கு நீதவான் பிறப்பித்த உத்தரவு

மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர்
லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட அவர் இன்றைய தினம் (07.12) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, கொள்ளுப்பிட்டிய சந்தியில் டிபெண்டர் ரக வாகனமொன்றைச் செலுத்தியபோது,
எதிர்த்திசையில் பயணித்த காரொன்றுடன் மோதியதில் விபத்து சம்பவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply