எதிர்காலத்தில் உப்பு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்தியாவிலிருந்து சுமார் 20,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய உப்பு நிறுவனங்கள் அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் நாட்டில் நிலவிய மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து உப்பை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டும் என வர்த்தகர்கள்
தெரிவித்துள்ளனர்.