சிரியா ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேற்றம்

சிரியா ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேற்றம்

சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்தது.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் இராணுவத்துடன் மீண்டும் சண்டையைத் தொடங்கியுள்ளனர்.

ஆசாதின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரச் சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில், இராணுவத்தினர் உட்பட 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ நகர் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், தாம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ்க்குள் நுழைந்ததாக சிரிய கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, டமாஸ்கஸின் மோவாதமியா அல்-ஷாம் மற்றும் தரயா உள்ளிட்ட பல்வேறு புறநகர்ப் பகுதிகளிலிருந்தும், மிஜ்ஜே இராணுவ விமான நிலையத்திலிருந்தும் கூட அரசுப் படைகள் திரும்பப்பெறப்பட்டு விட்டன எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் டமாஸ்கஸை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பிரதமர் முகமது அல்-ஜலாலி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தலைமைக்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று அறிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version