இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம்,
இலங்கை அமரபுர மகா பீடத்தின் அம்பகஸ்பிட்டிய பிரிவின் 16 ஆவது மகாநாயக்கர் பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அம்பலாங்கொட,
கந்தேகெதர மகா சைத்திய பிரிவேன் விகாரையினதும், கொழும்பு 14, ஸ்ரீ இசிபதனாராம மகா விகாரையின் பிரதம விகாராதிபதியுமான கலாநிதி மாதம்பாகம அஸ்ஸஜி திஸ்ஸ தேரரை சந்தித்தார்.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் நிமித்தம் அவருடைய அறிவுரைகளைகளையும்,
ஆலோசனைகளையும் பெற்ற எதிர்க்கட்சித் தலைவர், ஆசியையும் பெற்றுக் கொண்டார்.