அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புத்தேகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறியொன்றும் அனுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கி பயணித்த லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய லொறியில் பயணித்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.