தேவாலயங்களில் 45,000 பொலிஸார் கடமையில்

தேவாலயங்களில் 45,000 பொலிஸார் கடமையில்

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக சுமார் 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நத்தார் பண்டிகையையொட்டி சிறைச்சாலை கண்காணிப்பாளர்களுக்கு திறந்த வெளி பார்வையாளர்களை காண விசேட சந்தர்ப்பம் வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version