இலங்கையின் பால் உற்பத்தி திட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பில் போலந்து மற்றும் இலங்கை அரசுகள் கவனம் செலுத்தியுள்ளன.
அதுதொடர்பில் ஆராய்வதற்கு போலந்திலிருந்து அடுத்த சில நாட்களில் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நேற்றைய தினம் (07/12) இலங்கைக்கான போலந்து நாட்டின் தூதுவர் அடம்ஸ் பராகுஸ்கிக்கும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் பிரகாரம், இரு நாடுகளுக்கும் இடையிலான விவசாய துறை சார்ந்த விடயங்களும், இலங்கையிலிருந்து விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.