அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஓர்லியன்ஸ் நகரின் போர்பன் தெருவில் இடம்பெற்ற திட்டமிட்ட வாகன தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர்பன் வீதியில் மக்கள்கூட்டம் மீது ட்ரக் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அமெரிக்க நேரப்படி இன்று (01.01) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ட்ரக் அதிவேகமாக கூட்டத்தின் மீது மோதியதுள்ளது. பின்னர் சாரதி வாகனத்தை விட்டு இறங்கி மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ய முற்பட்ட வேளையில், பதிலுக்கு பொலிஸாரும் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என மேலும் தகவல் வெளியாகியுள்ளது.