விறு விறுப்பான போட்டியில் இலங்கைக்கு வெற்றி

விறு விறுப்பான போட்டியில் இலங்கைக்கு வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நியூசிலாந்து நெல்சனில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான 20-20 போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 219 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நியூசிலாந்து அணி, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டனர். இறுதியில் 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ரச்சின் ரவீந்திர 69(39) ஓட்டங்களையும், டெரில் மிச்சல் 35(17) ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் சரித் அஸலங்க 3 விக்கெட்களையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களையும், நுவான் துஷார 01 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

இலங்கை அணி 20 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி 20-20 போட்டிகளில் பெற்றுக்கொண்ட இரண்டாவது கூடுதலான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். குஷல் பெரேரா அபாரமாக அதிரடி நிகழ்தி 46 பந்துகளில் 101 ஓட்டங்களை பெற்றுகொண்டார். இது அவரின் முதல் 20-20 சதமாகும். இலங்கை அணி சார்பாக 20-20 போட்டிகளில் பெறப்பட்ட மூன்றாவது சதமாகும். சரித் அசலங்க 24 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இருவரும் 100 ஓட்டங்களை 45 பந்துகளில் அதிரடியாக பகிர்ந்தனர். குஷல் மென்டிஸ் 22(16) ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 17(12) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஷகரி போக்ஸ், மிட்செல் சென்ட்னர், மட் ஹென்றி, ஜகோப் டபி, டெரில் மிச்சல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

குஷல் பெரேரா 20-20 போட்டிகளில் இலங்கை அணி சார்பாக 2000 ஓட்டங்களை கடந்த முதல் வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

மூன்று போட்டிகளடங்கிய தொடரை நியூசிலாந்து அணி 2-1 என வென்றுள்ளது.

Social Share

Leave a Reply