சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்து தயாரிப்பு நிறைவாகியிருந்த மதரகராஜா திரைப்படம் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் 12 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட நிலையில் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் அன்டனி இசையமைத்துள்ளார். ஜெமினி பிலிம் சேர்க்கிட் தயாரித்த இந்த திரைப்படம், பணப்பிரச்சினை காரணமாக வெளியாகாமல் இழுபட்டு வந்து நிலையில் தற்போது வெளியாக தயாராகியுள்ளது.