டயகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோர் இன்று (04.01) மைதான வளாகத்திற்கு விஜயம் செய்தனர்.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அருண பனாகொட மற்றும் சுசந்த தொடவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.