சட்டவிரோதமாக நாட்டிற்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நேற்று (08/12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டுக்கு சட்டவிரோதமாக பணம் அனுப்பும் நடவடிக்கைகளை தடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற கணக்குகள் தடை செய்யப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் சட்டவிரோதமாக நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டதுடன், சட்டவிரோத கணக்குகளுக்கு தடை விதிப்பதற்கான அதிகாரம் காணப்படுவதாகவும், யுத்த காலத்திலும் இவ்வாறான கணக்குகள் தடை செய்யப்பட்டன என்றும் கூறினார்.
எனவே, உரிய முறையில் பணத்தை அனுப்புமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கோரிக்கை விடுத்தார்.