Clean SriLanka – மேல் மாகாண சபையின் அதிகாரிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு

Clean SriLanka - மேல் மாகாண சபையின் அதிகாரிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கமைய நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்படும் “Clean Sri Lanka” திட்டம் தொடர்பாக மேல் மாகாண சபையின் அதிகாரிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று (09) மேல் மாகாண சபை கட்டடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், மேல் மாகாண சபையின் பிரதான செயலாளர், மேல் மாகாண ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்று தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

மேல் மாகாண சபை வருடாந்தம் செயல்படுத்தும் அபிவிருத்தி திட்டங்களை “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் கொண்டு வருவது மற்றும் மக்களிடமிருந்து வரும் பரிந்துரைகளை “Clean Sri Lanka” திட்டத்துடன் இணைப்பது போன்ற விடயங்கள் குறித்து அதிகாரிகளை அறிவூட்டுதல் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகக் காணப்பட்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version