‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட திணைக்கள தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(10.01.2025) வியாழக்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட திணைக்கள தலைவர்களுக்கு தெளிவூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சாரதாஞ்சலி மனோகரன் அவர்கள் கலந்து கொண்டு ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத் திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கியதுடன், திணைக்கள தலைவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
மேலும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத் திட்ட நிகழ்வில் எடுத்துக் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன் அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை ஒழித்தல், டிஜிற்றல் ஸ்ரீலங்கா, கிளீன் ஸ்ரீலங்கா ஆகியவற்றை செயற்படுதல் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து குறித்த திட்டம் திணைக்கள மட்டத்தில் முன்னெடுத்துச் செல்லப்படும்.
இக் கருத்தரங்கில் மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், திணைக்களங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.