கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் இன்று (10.01) கைது செய்யப்பட்டார்.
அயலவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.