கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பசறையில் உள்ள 15 ஆவது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (11.01) காலை இடம்பெற்றுள்ளது.
சாரதி தூங்கியதால் இந்த விபத்து சம்பவித்ததாக கூறப்படுகிறது.
பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.